தமிழ்நாடு

18  எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் 17 பேர் சார்பில் மனு தாக்கல்

18  எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை: 18  எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சசிகலா அணியின் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தனர். இது அரசின் கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது.

இதையடுத்து அந்த 18 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு வழங்கியது.

தீர்ப்பில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் இரு வேறு விதமான தீர்ப்புகளை வழங்கியதால் இந்த வழக்கில் 3-ஆவது நீதிபதியாக, நீதிபதி விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார்.

இந்நிலையில் 18  எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டால் உரிய நீதி கிடைக்காது என்றும், உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கினை மாற்ற கோரியும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் மட்டும் மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT