தமிழ்நாடு

இயக்குநர் கௌதமன் கைது

தினமணி

சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக திரைப்பட இயக்குநர் வ.கெளதமனை திருவல்லிக்கேணி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. அதேநேரத்தில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் ஏப். 19-இல் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, இயக்குநர் கெüதமன் தலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
 இந்நிலையில், சென்னை சூளைமேடு என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற போலீஸார் கெüதமனை (46) விசாரணைக்காக திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஏப்ரல் 10-ஆம் தேதி காவல்துறையின் எச்சரிக்கையை மீறி அத்துமீறி செயல்பட்டதாகக் கூறி கொலை முயற்சி, அரசுப் பணியாளர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கெüதமனை கைது செய்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT