தமிழ்நாடு

பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக வி.சி.ராமேஸ்வரமுருகன் நியமனம்

தினமணி

தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக வி.சி.ராமேஸ்வரமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் சனிக்கிழமை வெளியிட்ட அரசாணை:
 பள்ளிக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி வந்த ரெ.இளங்கோவன் வயது முதிர்வின் காரணமாக ஜூன் 30-ஆம் தேதி பிற்பகல் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூலை 1-ஆம் தேதி முதல் காலியேற்படும் பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்துக்கு நிர்வாக நலன் கருதி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் கூடுதல் திட்ட இயக்குநராகப் பணிபுரியும் வி.சி.ராமேஸ்வரமுருகனை பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது.
 பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள வி.சி.ராமேஸ்வரமுருகன் கடந்த 2012-2013-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி இயக்குநராகவும், 2013-2014-இல் பள்ளிக் கல்வி இயக்குநராகவும், 2014-2016-இல் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் கூடுதல் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வந்தார். பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்புடன் கூடுதலாக பொது நூலக இயக்குநர் பொறுப்பை கவனித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT