முகப்பு
தமிழ்நாடு

ஆனைமலை புலிகள் காப்பக அறைகளுக்கு இணையதள முன்பதிவு தொடக்கம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அறைகளில் தங்க இணையதள முன்பதிவு வசதி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அறைகளில் தங்க இணையதள முன்பதிவு வசதி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 16 ஓய்வு இல்லங்கள், 2 டார்மெட்ரிகள் (கூடம்) உள்ளன. இதில் 100 பேர் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறைகளைப் பதிவு செய்ய பொள்ளாச்சியில் உள்ள அலுவலகத்துக்கு சுற்றுலாப் பயணிகள் நேரில் வரவேண்டி இருந்தது. 
இந்நிலையை மாற்ற இணையதள பதிவு முறை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத் தலைமை வனப் பாதுகாவலர் கணேசன் இணையதளப் பதிவைத் தொடக்கிவைத்தார். www.atrpollachi.com என்ற இணையதளத்தில் அறைகளை முன்பதிவு செய்யலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →