முகப்பு
தமிழ்நாடு

மருத்துவக் கவுன்சில் தேர்தல்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, டாக்டர் பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. 
இந்த தேர்தலின் போது மருத்துவ கவுன்சில் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. மொத்தம் உள்ள 83 ஆயிரத்து 253 வாக்காளர்களில், சுமார் 58 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 
எனவே இந்த தேர்தல் செல்லாது. தேர்தல் விதிகளை முறையாக பின்பற்றி புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும். 
அதுவரை மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாத்து வைக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →