முகப்பு
தமிழ்நாடு

திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி! 

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:23 PM
பகிர்:

உடுமலைப்பேட்டை: திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையைச் சேர்ந்தவர் ராகவன். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு அருண் கார்த்திக் மற்றும் சுஜா என இரு குழந்தைகள் உள்ளனர். 

ராகவன் சமீப காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக நோய் வாய்ப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. இதனால் அவர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இதன் காரணமாக உண்டாகும் பிரச்னைகளை சமாளிக்க இயலாமல் நால்வரும் குடுமபத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி வெள்ளியன்று மாலை அனைவரும் குடும்பத்தோடு விஷமருந்தினர்.

பின்னர் எதிர்பாராமல் அங்கு வந்த உறவினர் ஒருவர் மூலமாக அவர்களது நிலைமை அறிந்து, அனைவரும் உடனடியாக உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →