தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழன் சிலை காணவில்லை: மாவட்ட எஸ்பி தகவல்

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் காணவில்லை என்று மாவட்ட எஸ்பி செந்தில்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Raghavendran

தஞ்சை பெரிய கோயிலில் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக, 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்படும் ராஜராஜ சோழன் உள்ளிட்ட சிலைகள் தொடர்பாக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை எஸ்பி செந்தில்குமார் கூறியதாவது:

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் சிலை, அவரது மனைவி லோகம்மாள் சிலை உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 13 சிலைகளைக் காணவில்லை. காணாமல் போன சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, அதுகுறித்து விரைவில் குஜராத் சென்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிலைகள் காணவில்லை என்று முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோயிலில் காணாமல்போன ராஜராஜ சோழன் சிலை, லோகம்மாள் சிலை உள்ளிட்ட சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT