தமிழ்நாடு

காவிரிப் படுகையில், தமிழக மக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் துரோகம்: கமல்ஹாசன்

Raghavendran

நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் எனப் பெயரிட்டு, அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மதுரை பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் திருச்சியில் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். 

இதனிடையே, மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் வரும் 8-ஆம் தேதி பொதுக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் அணி நிர்வாகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இறுதியாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றுகிறார். இதில் கமல்ஹாசன், பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு அக்கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு என்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT