தமிழ்நாடு

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

DIN

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.-க்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.-க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளர்களும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பார்த்திபன் உள்ளிட்ட 4 பேர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் மனுதாரர் மட்டும் எதிர்மனுதாரர்கள் தரப்பின் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அனைத்துத் தரப்பினரும் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் மட்டும் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. 
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT