தமிழ்நாடு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாநில அறிவியல் கண்காட்சி: ஆளுநர் தொடங்கிவைத்தார்

DIN

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார்.
காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் இந்த அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. வரும் 15ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் அறிவியல் துறை, அறிவியல் சாதன தயாரிப்பு நிறுவனங்கள், அறிவியல் புத்தக பதிப்பாளர்கள் என அறிவியல் ஆய்வு சம்பந்தப்பட்ட 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 
கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் பார்வையிடும் இந்த அறிவியல் கண்காட்சியானது 'மேக் இன் இந்தியா' எனும் மத்திய அரசின் திட்டத்தை விளக்கும் வகையில் நடத்தப்படுகிறது. கண்காட்சியை செவ்வாய்க்கிழமை காலையில் ஆளுநர் பன்வாரிலால் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.பி. செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
கண்காட்சியைத் தொடங்கிவைத்த ஆளுநர் மாற்று உயிரி எரிசக்திக்கான மாதிரியைப் பார்வையிட்டார். அவரிடம் ஆய்வு மாணவி மாற்று எரிசக்தியை உற்பத்தி செய்வது குறித்து விளக்கினார். மேலும், நீருக்கடியில் மூழ்கி ஆய்வு செய்யும் சாதனம் குறித்தும் ஆளுநரிடம் மாணவர்கள், ஆய்வு பேராசிரியர்கள் விளக்கினர். 
அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும்: அறிவியல் கண்காட்சி குறித்து பல்கலை. துணைவேந்தர் பேராசிரியர் பி.பி. செல்லத்துரை கூறியதாவது: கண்காட்சி மூலம் 'மேக் இன் இந்தியா' திட்டம் குறித்த இளந்தலைமுறையிடம் விளக்கப்படும். அறிவியல் ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடையே தூண்டும் விதமாகவும் கண்காட்சி அமையும். தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT