தமிழ்நாடு

ஹெலிகாப்டர் சேவையை அரசு தொடங்க வேண்டும்: அனைத்து டாக்டர்கள் சங்கம்

DIN

தமிழக அரசு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் சி. சுந்தரேசன், அரசு டாக்டர்கள் நலச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜி.சுரேஷ் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழகத்தில் முதுநிலை மருத்துவக் கல்வியில் உள்ள மொத்த இடங்களில், 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது. ஆனால், அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மத்திய அரசின் இந்தப் போக்கு சமூக நீதிக்கும், இடஒதுக்கீட்டுக்கும் எதிரானது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வழங்க வேண்டும். 
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்க வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அரசு மருத்துவர்களுக்கும் ஏழை மக்களுக்கும் எதிரானது. முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு சதவீதத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும், கூடுதல் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தையும் மாநில அரசுகளிடமே வழங்கும் வகையில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவர வேண்டும். 
தமிழக அரசு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர் இறங்குதளங்களை உடனடியாக அமைக்க வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சைப் பிரிவுகளையும், அவசர சிகிச்சைப் பிரிவுகளையும் உருவாக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அவசர சிகிச்சை மேற்படிப்புகளைத் தொடங்கிட வேண்டும். இதன் மூலம் பேரிடர் காலத்தில் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க முடியும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT