தமிழ்நாடு

உடுமலை சங்கர் கொலை வழக்கு: கௌசல்யாவின் தந்தை மேல்முறையீடு 

DIN

உடுமலை சங்கர் கொலை வழக்கில் தூக்குதண்டனையை எதிர்த்து கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

உடுமலைப்பேட்டை சங்கர் கௌரவ கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேரில், 6 பேருக்கு திருப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தும், இருவருக்கு குறைந்தபட்ச தண்டனைஅளித்தும் தீர்ப்பளித்தது. மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் மனைவி கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை மற்றும் 16 வயது உறவினர் ஆகிய மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. 

இந்நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேர் தூக்குதண்டனையை எதிர்த்தும், ஸ்டீபன் ராஜ் ஆயுள் தண்டனையை எதிர்த்தும், மணிகண்டன் 5 ஆண்டு தண்டனையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனு குறித்து உடுமலை டிஎஸ்பி 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT