தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மட ஜீயர் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் காலமானார்! 

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மடத்தின் ஜீயரான  ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் உடல்நலக்குறைவால் திங்களன்று காலை காலமானார்.

DIN

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மடத்தின் ஜீயரான  ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் உடல்நலக்குறைவால் திங்களன்று காலை காலமானார்.

ஸ்ரீரங்கத்தில் உள்ள பழமை வாய்ந்த வைணவ மடங்களில் ஸ்ரீமத் ஆண்டவன் மடமும் ஒன்று. அம்மடத்தின் தற்போதைய ஜீயர் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர். உடலநலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னையில் தங்கியிருந்து வந்தார்.

இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் திங்களன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. தற்பொழுது பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் சென்னையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர். அடிப்படையில் தமிழ் ஆசிரியராக இருந்தவர். தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்தார். இவர் பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி உள்ளார். பல புத்தங்களும் எழுதியுள்ளார்.  

மரணமடைந்த ராமானுஜ மகா தேசிகரின் இறுதி சடங்கு நாளை ஸ்ரீரங்கம் ஆண்டவர் மடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT