தமிழ்நாடு

டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற இரு காவலர்கள் கைது

தினமணி

சென்னை டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற இரு காவலர்கள் கைது செய்யப்பட்டு, வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
 தேனி மாவட்ட காவல் துறையின் ஆயுதப் படையைச் சேர்ந்த காவலர்கள் ஜெ. கணேஷ் (28), ஆ.ரகு (29). இருவரும் தேனி மாவட்டம், ஆயுதப் படை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புதன்கிழமை புகார் கொடுத்தனர்.
 பின்னர் டிஜிபி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த இருவரும், வாயிலில் நின்ற பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதைத் தொடர்ந்து, இருவரும் தாங்கள்
 கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தனர். இதனால் அங்கிருந்த பாதுகாப்பு போலீஸார், இருவரையும் மீட்டு டிஜிபி அலுவலத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரிடமும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 அதைத் தொடர்ந்து இருவரும், மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை கிழக்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் டி.எஸ். அன்பு, இரு காவலர்களிடமும் சுமார் அரைமணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து இரு காவலர்கள் மீதும் மெரீனா காவல் நிலையப் போலீஸார் தற்கொலைக்கு முயன்றது, ஆபத்தான பொருளை வைத்திருந்தது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது உள்பட 7 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
 கைதான கணேஷ், ரகு ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT