சென்னை: விவேக் ஜெயராமனது குடும்பமே போர்ஜரி குடும்பம்தான் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். இவர் தமிழக சட்டப் பல்கலைகழகத்தில் முன்னாள் துணைவேந்தர் வணங்கமுடியின் பதவிக்காலத்தில், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, என்.ஆர்.ஐ கோட்டா மூலம் மூன்று ஆண்டுகள் கொண்ட எல்.எல்.பி படிப்பில் சேர்ந்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விவேக் ஜெயராமனது குடும்பமே போர்ஜரி குடும்பம்தான் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பல்கலை., சேர்க்கை விவகாரம் தொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
விவேக் ஜெயராமன் மட்டும் அல்ல; விவேக் ஜெயராமனது குடும்பமே போர்ஜரி குடும்பம்தான். ஆனால் அதற்காக எல்.எல்.பி படிப்பில் கூட மோசடி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஜெயிலுக்கு செல்லத்தான் வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.