கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு
வேட்புமனுக்களுக்கான ஒப்புகைச் சீட்டு முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களுக்கான ஒப்புகைச் சீட்டு முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாகை மாவட்டத்தைச்ச சேர்ந்த மாசிலாமணி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களில் நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 26 -ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. வரும் திங்கள்கிழமை(ஏப்.2) முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரின் வேட்புமனுக்களை அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். அப்படியே மனுக்களை வாங்கினாலும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. கூட்டுறவுச் சங்க விதிகளுக்கு முரணாக நடைபெற உள்ள இந்தத்தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.