கூட்டுறவு சங்கத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும்
கூட்டுறவு சங்கத் தேர்தல்களை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூட்டுறவு சங்கத் தேர்தல்களை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கூட்டுறவுச் சங்கங்களுக்கு போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை தடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் வேட்பு மனுத்தாக்கலுக்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரிடம் வேட்பு மனுவைத் தராமல் காலம் தாழ்த்தியும், பூர்த்தி செய்த மனுவைப் பெறாமலும், மனுக்களை எந்தக் காரணமும் இல்லாமல் தள்ளுபடி செய்தும் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
பல மாவட்டங்களில் கூட்டுறவுச் சங்கங்களைத் திறக்காமலும், அதிகாரிகள் வராமலேயே பூட்டிய சங்க அலுவலகங்களின் வாயிலில் ஆளும்கட்சியைச் சேர்ந்த இயக்குநர்கள் பட்டியலை அறிவிப்புப் பலகையில் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பெரும் முறைகேடு செய்வதற்காக, கேள்வி கேட்க யாரும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்படும் ஆட்சியாளர்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக தமது அறிக்கையில் தினகரன் தெரிவித்துள்ளார்.