தமிழ்நாடு

ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

DIN

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்-லைன் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பத்தை வியாழக்கிழமை (மே 3) முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு ஆன்-லைனில் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை வியாழக்கிழமை முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும். மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
விண்ணப்பத்தை எப்படிப் பதிவு செய்வது என்பன உள்ளிட்ட முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்டது. அத்துடன், மாணவர்களின் உதவிக்காகவும், அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் மாணவர்கள் கட்டணம் இன்றி சேவையைப் பெற முடியும். மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை (www.annauniv.edu) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT