முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வு குறித்து முன்கூட்டியே முழு விவரங்கள் தெரிவிக்கப்பட்டது: சிபிஎஸ்இ

தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகினர். 

Updated On : 7 மே, 2018 at 10:44 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:29 PM

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்து 26,725 மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தாஸ், சிக்கிம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு எழுதினர். வெளிமாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகினர். 

மின்னணு பொருட்கள், ஷூ முழுக்கை சட்டை, டி - சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, நகைகள், புடவை, பர்தா, தொப்பி, பைஜாமா குர்தா உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

Advertisement

அரைக்கை சட்டை, செருப்பு, கால்சட்டை, ஜீன்ஸ் கால்சட்டை, மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், சிறிய அளவு ரப்பர் பேண்ட் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திருமணமான பெண்கள் தாலி, வளையல் அணிய அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதுவதற்கான பேனா தேர்வுக் கூடத்திலேயே வழங்கப்பட்டது. 

மாணவர்கள் காலை 7.30 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்பட்டது. மாணவர்களுக்கு 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.