முகப்பு
தமிழ்நாடு

மீன்பிடிப் படகுகளை சீரமைக்க அரசு உதவி கிடைக்குமா? 

மீன்பிடித் தடைக் காலத்தில் படகுகளைச் சீரமைக்க அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:00 PM
பகிர்:

மீன்பிடித் தடைக் காலத்தில் படகுகளைச் சீரமைக்க அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். 
கடலூர் மாவட்டத்தில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு கடற்கரையும், 49 மீனவ கிராமங்களும் உள்ளன. மீன்பிடித் தொழிலில் சுமார் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். பெரிதும், சிறிதுமாக சுமார் 3,500 மீன்பிடி படகுகள் உள்ளன. 
மீன்களின் இனப் பெருக்கக் காலமாக ஏப்.15-ஆம் தேதி முதல் 60 நாள்கள் கணக்கிடப்படுகிறது. இந்த நாள்களில் மீன்கள் இனப் பெருக்கம் செய்திடும் வகையில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாள்களில் தங்களின் வாழ்வாதாரத்துக்காக பதிவு செய்துள்ள மீனவர்களுக்கு அரசு தலா ரூ.5 ஆயிரம் வழங்குகிறது.
மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களில் பெரும்பாலோர் மாற்றுத் தொழிலுக்குச் செல்ல விரும்பாததால் படகுகள், வலைகளை சீரமைத்தல், மீன்பிடி சாதனங்களைப் பழுது நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் கடந்த சில வாரங்களாக இந்தப் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ராசாப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் எம்.எஸ்.சத்யா கூறியதாவது: 
மீனவர்களுக்கான வாழ்வாதார நிதியை அரசு உயர்த்தி வழங்க வேண்டும். ஏனெனில், கடந்த 2 ஆண்டுகளாக கடலின் தன்மை மாறியுள்ளதால், இந்தப் பகுதியில் மீன்பிடிப்பு தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 
தற்போது தடைக் காலத்தால் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றார்.
தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் கூறியதாவது: 
கேரளம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் மீனவர்களின் படகுகளை சரிசெய்திட அந்தந்த மாநில அரசுகள் நிதி உதவி வழங்குகின்றன. 
ஆனால், தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலமான 60 நாள்களுக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, மீன்பிடித் தடைக் கால வாழ்வாதாரத் தொகையை உயர்த்தி வழங்குவதோடு, மீன்பிடி படகுகள், வலைகள், சாதனங்களை பழுதுபார்த்திட உரிய நிதி வழங்க வேண்டும் என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →