வெப்பச் சலனம்: தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு
வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
தென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதனால், தமிழக மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
4 இடங்களில் வெயில் சதம்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் 104 டிகிரியும், வேலூரில் 103, மதுரை, கரூர் மாவட்டம், பரமத்தி ஆகிய இடங்களில் 100 டிகிரியும் திங்கள்கிழமை வெயில் பதிவானது.
திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு வெப்பம் 100 டிகிரிக்கு மேல் அதிகரித்து காணப்படும் என அவர் தெரிவித்தார்.