தமிழ்நாடு

தோல்வியுற்ற, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு ஜூன் 25-இல் தேர்வு

DIN

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் ஜூன் 25-ஆம் தேதி முதல் மறுதேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு 91.1 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இது ஒரு சதவீதம் குறைவாகும்.
இந்தநிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தேர்வெழுதாத மாணவ-மாணவிகளுக்கு வரும் ஜூன் மாதம் 25-ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்றும், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள் மறு கூட்டலுக்கு மே 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த மன அழுத்தத்தை போக்கும் வகையில் மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சலிங் பெற விரும்பும் மாணவர்கள் "14417' என்ற "ஹெல்ப் லைன்' எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால் மாணவர்களுக்குத் தேவையான கவுன்சலிங் உதவிகள் கிடைக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT