பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: டிடிவி தினகரன் கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
பெட்ரோல் -டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிகப் பெரிய தாக்குதலாகும். விலைவாசி உயர்வு அனைத்துக்கும் பெட்ரோல் -டீசல் விலை உயர்வே காரணம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரின் விளக்கம் கண்டனத்துக்குரியது.
தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் -டீசல் மீது அதிக அளவு வரிகள் விதிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. பெட்ரோல் -டீசலின் மூலம் வரி வருவாயைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டும் மத்திய -மாநில அரசுகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டு வரிகளை உடனடியாகக் குறைத்து மக்களைக் காக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.