தமிழ்நாடு

திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம்: வைகோ, திருமாவளவன் பங்கேற்பு

திமுக சார்பிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

DIN

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியதை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க 22-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில் வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருமாளவன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் 20-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். குறிப்பாக, ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், கமல்ஹாசன் கூட்டிய கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில், திமுக சார்பில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவின் ஒரேநோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதுதான்: நயினார் நாகேந்திரன்

காலத்தை வென்ற மரபுக் கவிதை!

ஈதலும் இசைபட வாழ்தலும்...

“பிகார் வெற்றிக்கு SIR தான் காரணம்!” சீமான் பேட்டி | Trichy | NTK

அறக்கேட்டை உணர்ந்தால்...

SCROLL FOR NEXT