தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

DIN

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில்,
நீண்ட நாட்களாக தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதை அதிமுக அரசு கண்டு கொள்ளவும் இல்லை, சுமூக தீர்வு காணவும் இல்லை. 

வழக்கம்போல் மக்கள் போராட்டத்தை முடக்க நினைத்த அதிமுக அரசின் அலட்சியத்தாலேயே, இன்று மக்கள் பேரணி நடத்தி, அது துப்பாக்கி சூடு வரை சென்றுள்ளது. இன்றைய பேரணி பற்றி முன்பே அறிந்த காவல்துறை, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது.

இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் இந்த அரசின் கையாலாகத்தனமும், உளவுத்துறையின் தோல்வியும் தான். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஸ்டர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேநேரத்தில் மக்களின் நலனுக்காக நடைபெறும் போராட்டங்கள் ஜனநாயகரீதியிலும், அறவழியிலும் நடந்திடும் வகையில் எதிர்காலத்திலாவது இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT