தமிழ்நாடு

சென்னையில் ரூ. 80-ஐ தொட்டது பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ. 80.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  

DIN

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு, சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்ந்து வருவதே காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. 

எனினும், விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை குறைக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்-டீசலை கொண்டு வர வேண்டும் என்றும் ஃபிக்கி, அசோசேம் போன்ற தொழில்துறை கூட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தினசரி உயர்ந்து வரும் பெட்ரோல் விலை, இன்றைய நிலவரப்படி நேற்றை விட 32 காசுகள் உயர்ந்து 80.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை நேற்றை விட 27 காசுகள் உயர்ந்து 72.14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோல் விலை தொடும் புதிய உச்சம் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT