தமிழ்நாடு

மாநிலங்களுக்குள் மின்வழிச் சீட்டு முறை ஜூன் 1 முதல் அமல்

DIN

மின் வழிச் சீட்டு (இ-வே பில்) முறை மாநிலங்களுக்குள்ளான சரக்குப் போக்குவரத்துக்கு ஜூன் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்றார் மத்திய சரக்கு சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி ஆணையர் (திருச்சி) ஜெ.எம். கென்னடி.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மத்திய சரக்கு, சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி கோட்ட அலுவலகத்தில் வர்த்தகர்கள், தொழில்புரிவோருக்கான கருத்தரங்கக் கூடத்தைப் புதன்கிழமை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மின் வழிச் சீட்டு என்பது சரக்குகளைக் கொண்டு செல்வதற்காகப் பொது வலைதளத்தில் உருவாக்கம் செய்ய வேண்டிய ஆவணம். இதுவரை மின் வழிச் சீட்டு முறை மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஜூன் 1-ம் தேதி முதல் மாநிலத்துக்கு உள்ளேயே சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்பட உள்ளது.
இது, சரக்கு, சேவை வரியுடன் (ஜி.எஸ்.டி.) தொடர்புடைய மிக எளிதான முறை. இதன் மூலம் சரக்கு சேவை வரியின் சோதனை சாவடி முறை ஒழிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் போக்குவரத்து ஆவணம் வாங்க வேண்டிய முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டுக்கும் மாற்றாக மின் வழிச் சீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருமுறை மின்வழிச் சீட்டை இணையதளத்துக்குச் சென்று உருவாக்கிக் கொண்டால் நாடு முழுவதற்கும் மற்றும் தமிழகத்துக்கு உள்ளேயே சரக்குப் போக்குவரத்துக்கு உதவியாக இருக்கும்.
இதுதொடர்பாக தமிழில் வினா - விடை அடிப்படையிலான கையேட்டை வெளியிட்டுள்ளோம். வரி செலுத்துவோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை யூ டியூப், இணையதளத்திலும் பார்க்கலாம். மக்கள் அனைவரும் இந்த மின் வழிச் சீட்டு முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) திட்டத்தில் நாடு முழுவதும் ஏறக்குறைய ஒரு கோடி பேர் சேர்ந்துள்ளனர். திருச்சி மண்டலத்தில் ஒரு லட்சம் பேர் இணைந்துள்ளனர். இவர்களில் 75,000 பேர் மத்திய அரசுக்கும், 25,000 பேர் தமிழக அரசுக்கும் உள்பட்டுள்ளனர். இதை ஒரு மகத்தான வெற்றி என்றே கூற வேண்டும். இந்தச் சரக்கு, சேவை வரி நாம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான வருவாயாக உள்ளது. இதில், தமிழகம் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது என்றார் கென்னடி.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT