முகப்பு
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கையை அரசு எடுக்கும்: ஆட்சியர் சந்தீப் உறுதி

ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு உறுதியாக எடுக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சனிக்கிழமை உறுதியளித்தார்.

Updated On : 26 மே, 2018 at 7:55 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:38 PM

ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு உறுதியாக எடுக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சனிக்கிழமை உறுதியளித்தார். இதுகுறித்து மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் அவர் தெரிவித்ததாவது:

ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு உறுதியாக எடுக்கும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாததால் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஆலை இயங்கவில்லை. 

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையே உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் அவர்களாலேயே பயன்படுத்த முடியாது என்றார்.

Advertisement

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தால்தான் எஞ்சிய 6 உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ய சம்மதிப்போம் என தூத்துக்குடியில் மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதல்வரிடம் தெரிவிப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.