தமிழ்நாடு

வீட்டுக் கழிவறையுடன் செல்ஃபி எடுத்து சம்பளம் பெறுங்கள்: உ.பி. மாவட்ட நீதிபதி கறார் உத்தரவு

உத்தர பிரதேசத்தில் உள்ள சீதாபூர் மாவட்டத்தில் வீட்டுக் கழிவறையுடன் செல்ஃபி எடுத்து சமர்பித்தால் மட்டுமே சம்பளம் பெற முடியும் என நீதிபதி கறார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Raghavendran

உத்தர பிரதேசத்தில் உள்ள சீதாபூர் மாவட்டத்தில் வீட்டுக் கழிவறையுடன் செல்ஃபி எடுத்து சமர்பித்தால் மட்டுமே சம்பளம் பெற முடியும் என நீதிபதி கறார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சீதாபூர் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக அம்மாவட்ட நீதிபதி விநோத உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட நீதிபதி வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்து அரசு ஊழியர்களும் தங்களுடைய வீட்டின் கழிவறை முன்பு செல்ஃபி புகைப்படம் எடுத்து அவரவர் வீடுகளில் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதிபடுத்த வேண்டும். இந்த உத்தரவை மதிக்கத் தவறினால் மே மாத ஊதியம் நிறுத்திவைக்கப்படும்.

மேலும ஒவ்வொரு ஊழியரும் தங்கள் வீடுகளில் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற ஆதார சான்றிதழை இதனுடன் இணைத்து வழங்க வேண்டும் என்றிருந்தது.

மாவட்டம் முழுவதும் சுகாதாரத்தை ஏற்படுத்தவும், திறந்தவெளியில் அசுத்தம் செய்வதை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும் மாவட்ட நீதிபதி தரப்பில் இந்த கறார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

SCROLL FOR NEXT