தமிழ்நாடு

சென்னை ஐபிஎல் போராட்டத்தின் பொழுது போலீசாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது 

சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியின் பொழுது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தில் போலீசாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர். 

DIN

சென்னை: சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியின் பொழுது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தில் போலீசாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர். 

கடந்த மாதம் சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடந்த பொழுது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஐ.பி.எல்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பெரும் போராட்டம் நடந்தது. அப்பொழுது பணியில் இருந்த காவலர் ஒருவரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கடுமையாகத் தாக்கினார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. போலீசார் தனிப்படை அமைத்து அவரைத் தேடி வந்தனர்.  இந்த நிலையில் போலீசாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மதன்குமாரை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர். 

திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்ட மதன்குமார் எண்ணூரைச் சேர்ந்தவர் ஆவார்.  அவர் மீது  நான்கு வழக்குகளை போலீசார் அப்பதிவு செய்திருந்தனர். அதில் ஒரு வழக்கில்  அவர் முன் ஜாமீன் பெற்று உள்ளார். மீதமுள்ள 3 வழக்குகளில்  அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT