முகப்பு
தமிழ்நாடு

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:


தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து  பூவுலகின் நண்பர்கள்  அமைப்பு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், வனவிலங்கு வாரியத்தின் அனுமதியின்றி திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டதோடு, நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அளித்திருக்கும் அனுமதியை ரத்து செய்ய முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்த பின்னரே திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →