தமிழ்நாடு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித் துறை புதிய உத்தரவு

DIN


அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் குறைவாக உள்ள இடங்களில் ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதப்படி மாணவர் எண்ணிக்கையைவிட அதிக ஆசிரியர்கள் உள்ளனர். குறிப்பாக, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டிய நிலையில் பல பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். இதையடுத்து, அதிகமாக உள்ள ஆசிரியர்கள், அங்கிருந்து மாற்றப்பட்டு, தேவை உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். 
ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற இடமாறுதல் செய்ய முடியவில்லை. எனவே, உபரியாக ஆசிரியர்கள் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது அந்தப் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறுவோர் பணியிடத்தில் புதியவர்களை நியமிக்காமல் அரசிடம் ஒப்படைக்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT