தமிழ்நாடு

விஐடியில் பி.டெக். நுழைவுத் தேர்வு விண்ணப்ப விற்பனை தொடக்கம்

DIN


வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2019-ஆம் ஆண்டில் பி.டெக். பொறியியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் விற்பனையை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார். 
நுழைவுத் தேர்வு 2019 ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நாட்டில் உள்ள 124 முக்கிய நகரங்களிலும், துபை, குவைத், மஸ்கட், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள 175 மையங்களில் ஆன்லைன் முறையில் நடத்தப் பட உள்ளது.
இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலூர் உள்பட நாட்டில் உள்ள 22 முக்கிய நகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,200 செலுத்தியும், விஐடி பெயரில் ரூ. 1200-க்கு வங்கி வரைவு காசோலை செலுத்தியும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் www.vit.ac.in
என்ற இணையதளம் மூலம் ரூ. 1,150 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க 2019 பிப்ரவரி 28-ஆம் தேதி கடைசி நாளாகும். 
இதுகுறித்த மேலும் விவரங்களை www.vit.ac.in  என்ற இணையதளத்தில் அறிய லாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT