முகப்பு
தமிழ்நாடு

சூலூர்: நொய்யல் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன் 

சூலூர் அருகே நொய்யல் ஆற்றில் குளிக்க வந்த பள்ளி மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு

சூலூர்: நொய்யல் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன் 

சூலூர் அருகே நொய்யல் ஆற்றில் குளிக்க வந்த பள்ளி மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

சூலூர் அருகே நொய்யல் ஆற்றில் குளிக்க வந்த பள்ளி மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நொய்யல் ஆற்றில் நீச்சல் அடிக்கவும், மீன்பிடிக்கவும் வந்த பள்ளி மாணவர்கள் குணசேகரன், ரஞ்சித் ராஜ், திருமலைவாசன் ஆகியோர் குளித்துக் கொண்டிருந்த போது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில் திருமலைவாசன் சுதாரித்துக் கொண்டு கரையேறினார். அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ரஞ்சித் ராஜை பிடித்து கரைசேர்த்தனர். இதில் குணசேகரன் தண்ணீரில் சிக்கிக் கொண்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

குணசேகரன் 8வது படித்து வந்தார். மூன்று மாணவர்களும் செலக்கரைச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள். மீட்கப்பட்ட  ரஞ்சித் ராஜும் குணசேகரனும், சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →