தமிழ்நாடு

கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் விலை

DIN

கச்சா எண்ணெய் விலை வீழ்ந்துள்ள நிலையில் அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஓராண்டில் இல்லாத அளவு ஒரு பீப்பாய் 60.13 டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இப்போதுள்ள விலையும், கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி கச்சாய் எண்ணெய் விலையும் ஒன்றாகும். கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.65-ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60.79- ஆகவும் இருந்தது. அப்படியானால், இப்போதும் அதேவிலையில் தான் பெட்ரோலும், டீசலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.
 அதிக விலைக்கு விற்பனை: இப்போதைய சந்தை விலை பெட்ரோல் ரூ.80.90 ஆகவும், டீசல் ரூ.76.72 ஆகவும் உள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் இயல்பாக விற்பனை செய்ய வேண்டிய விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மீது ஏற்கெனவே 118 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதற்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலையை மறைமுகமாக உயர்த்தி விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT