தமிழ்நாடு

மாணவர்கள் சாதிக்க நேர்மறை சிந்தனை அவசியம்

DIN

மாணவர்கள் தங்கள் வாழ்வில் சாதிப்பதற்கு எப்போதும் நேர்மறையான சிந்தனையுடன் இருக்க வேண்டும் என அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கான மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
 ஆளுமைத் திறன், தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை போன்றவற்றை மாணவர்களிடம் மேம்படுத்துவதற்கான மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில் சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர் வித்யோதயா பள்ளி உள்பட 32 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1,000-த்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 தனித் திறமையைக் கண்டறிவதில்...இந்த மாநாட்டில் சீசல்ஸ் நாட்டின் கௌரவ துணைத் தூதர் சேஷாசாய் , ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வரும் "மாற்றம் ஃபவுண்டேஷன்' அமைப்பின் நிறுவனர் சுஜித்குமார்ஆகியோர் பேசியது: பள்ளிகளில் எந்த மாணவர் அதிகம் மதிப்பெண் எடுக்கிறாரோ அவருக்குத் தான் அதிக கவனம் அளிக்கப்படுகிறது. தனது தனித்திறமை மூலம் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. ஆனால், பள்ளிகளுக்குச் சென்று, பழைய ஆவணங்களை எடுத்துப் பார்க்கையில், மதிப்பெண் அதிகம் எடுத்தவரைவிட தனது தனித்துவத்தை காண்பித்தவர் தான் பெரும்பாலும் வாழ்க்கையில் சாதித்திருக்கிறார் என்பது தெரியவரும். எனவே மாணவர்களின் தனித் திறமையைக் கண்டறிவதில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
 நேர்மறை சிந்தனை வேண்டும்: பொதுவாக வெற்றி அடைபவர் நேர்மறை சிந்தனையையும், தோல்வியடைபவர் எதிர்மறை சிந்தனையையும் கொண்டுள்ளனர். நாம் எப்படி சிந்திக்கிறோமோ, அவ்வாறே நமது நடத்தையும் இருக்கும்.
 நேர்மறை சிந்தனையால் மேற்கண்ட ஏராளமான நன்மைகள் ஏற்படும் அதேவேளையில், எதிர்மறை எண்ணத்தால், பகைமை சிந்தனை, ஆரோக்கிய குறைபாடு, கசப்புணர்வு மற்றும் கடும் கோபம் போன்றவை ஏற்படும்.
 மாணவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் இருக்கக் கூடாது. அது ஞாபக சக்தியை பாதிக்கும். நேர்மறை சிந்தனைகள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
 பள்ளிகளில் இயற்பியல், வேதியியல் பாடங்களைப் போன்றே நீதிபோதனை பாடங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றனர்.
 ரோட்டரி அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் அதன் மாவட்ட கவர்னர் பாபுபேரம், நடிகர் மோகன் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT