முகப்பு
தமிழ்நாடு

பாஜக ஆபத்தான கட்சியா? நடிகர் ரஜினிகாந்த் பதில்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய முறை தவறு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த், திங்கள்கிழமை பதிலளித்ததாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் மத்திய அரசின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது குறித்து தெரியாது. 

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்றப்பட்டு அது உடனடியாக அமல்படுத்த வேண்டியது அவசியம். 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய முறை தவறாக இருக்கிறது, அது பற்றி விரிவாக பேச வேண்டும்.

பாஜக ஆபத்தான கட்சி என்று எதிர்கட்சிகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், அப்போது கண்டிப்பாக அப்படித் தானே இருக்க முடியும் என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →