தமிழ்நாடு

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 27 நாள்களாக சரிந்து வருதையடுத்து, இன்று பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில்

DIN

சென்னை:  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 27 நாள்களாக சரிந்து வருதையடுத்து, இன்று பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து முறையே லிட்டருக்கு 14 காசுகள், 13 காசுகள் குறைக்கப்பட்டு, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.42 ஆகவும், டீசல் ரூ.76.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி, கலால் வரி மிகக் குறைவானதாகக் கருதப்படும் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.43 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.72.19 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே மிக அதிகமாக கலால் வரி விதிக்கப்படும் மும்பையில், இன்று பெட்ரோல், டீசலின் விலை முறையே ரூ.82.94 மற்றும் ரூ.75.64 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் தொடங்கி, இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது விலை சற்று குறைந்து வருவது ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT