தமிழ்நாடு

பழங்குடியினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது: மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

DIN


பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் கூடாது என தமிழக அதிகாரிகளுக்கு மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் பாபோர் அறிவுறுத்தினார்.
மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் பாபோர் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியின நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டார்.
இதில், அமைச்சர் ஜஸ்வந்த்சிங் பாபோர் பேசியது:
தமிழகத்தில் பழங்குடியினருக்கான ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகப் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், அரசு ஊழியர்களாகப் பணியாற்றி ஓய்வுபெறும் பழங்குடியினருக்கும் ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தால் அவர்களால் பணப் பலன்கள் உள்ளிட்டவற்றைப் பெற முடியாத நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஜாதிச் சான்றிதழ் கேட்கும் பழங்குடியினர் விண்ணப்பங்களின் மீது வருவாய்க் கோட்டாட்சியர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின நலத் துறை முதன்மைச் செயலர் ஓட்டம் டாய் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்வருடன் சந்திப்பு: தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் அமைச்சர் ஜஸ்வந்த்சிங் பாபோர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியின நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி உடனிருந்தார். இதையடுத்து, சேப்பாக்கம் விருந்தினர் இல்லத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஜஸ்வந்த்சிங் பாபோரை சந்தித்துப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT