தமிழ்நாடு

கஜா புயல் பலவீனமடையாமல் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்பு: சிறப்புப் பதிவு

DIN


சென்னை: கஜா புயல் கரையைக் கடக்கும் முன்பு பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டதைப் போல அல்லாமல் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் குறித்து சிறப்புப் பதிவு ஒன்றை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தீவிரப் புயலாக மாறியுள்ள கஜா புயல் எதிர்பார்த்தது போல கரையைக் கடக்கும் முன்பு வலுவிழக்க வாய்ப்பு குறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இன்று இரவு அல்லது நள்ளிரவில் கடலூர் - வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இது வர்தா புயலுக்கு ஒப்பாக இருக்கலாம். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகப்பட்டினத்துக்கு அதி தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அருகில் உள்ள திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் விரிவடையும்.

புயல் கரையைக் கடக்கும் போது நாகப்பட்டினத்தில் மணிக்கு 100 - 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கஜா புயல் தீவிரமடைந்து பிறகு கரையைக் கடக்கும் முன்பு பலவீனமடையும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், அப்படி கரையை கடக்கும் முன்பே பலவீனமடைய வாய்ப்பு குறைந்துள்ளது. தீவிரப் புயலாகவே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தில் இருந்து தற்போது 150 - 175 கி.மீ. தொலைவில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. மணிக்கு 25- 30 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. இது தமிழகக் கடற்கரையை அடைய 6 மணி நேரம் ஆகலாம். இது இன்று இரவு அல்லது நள்ளிரவில் கரையைக் கடக்கலாம் என்றும், புயல் சின்னம் முழுவதும் கரையைக் கடக்க 4 மணி நேரம் கூட ஆகலாம் என்பதால், நாளை அதிகாலை வரை கரையைக் கடக்கும் நிகழ்வானது தொடரலாம் என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT