தமிழ்நாடு

ஆரணி அருகே சிவன் கோயிலில் 2 ஐம்பொன் சிலைகள், கோபுர கலசம் திருட்டு

DIN


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் அமைந்துள்ள சோமநாத ஈஸ்வரர் கோயிலில் புதன்கிழமை நள்ளிரவு 2 ஐம்பொன் சிலைகள், கோபுர கலசம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். வெள்ளேரி கிராமத்தில் ஸ்ரீகுங்குமநாயகி உடனுறை ஸ்ரீசோமநாத ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வழக்கம்போல, இந்தக் கோயில் பூசாரியான உலகநாதன், வியாழக்கிழமை காலையில் கோயிலை திறந்துள்ளார்.
அப்போது, கோயில் உள் பிரகாரத்தில் பிரதோஷ வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்ரீகுங்குமநாயகி, ஸ்ரீசோமநாத ஈஸ்வரர் உத்ஸவர் சிலைகள் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 2 கிராம் தங்க நகை, சிவன் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளிப் பட்டை, கோபுர கலசம் உள்ளிட்டவற்றையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஊர் பொதுமக்களுக்கும், ஆரணி கிராமிய போலீஸாருக்கும் உலகநாதன் தகவல் அளித்தார். அதன்பேரில், கோயிலுக்குச் சென்ற போலீஸார், கோயிலைச் சுற்றிலும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கைப் பணம் தொடர்ந்து திருடப்பட்டு வந்ததால், இங்கு உண்டியல் வைக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT