தமிழ்நாடு

இரவு 11.30 மணியளவில் கரையைக் கடக்கும் கஜா புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று இரவு 11.30 மணியளவில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று இரவு 11.30 மணியளவில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது, 
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் சென்னை, நாகையிலிருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 14 கி.மீ. வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் தற்போது மணிக்கு 18 கி.மீ.ஆக அதிகரித்துள்ளது. 

இரவு 11.30 மணியளவில் கஜா புயல் பாம்பன்-கடலூர் இடையே கரையைக் கடக்கும். கஜா புயல் கரையை கடக்கும்போது சென்னைக்கு பெரிய அளிவில் பாதிப்பு இருக்காது. கஜா புயல் காலை 11.30 மணியளவில் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. 

புயல் கரையை கடக்கும்போது 80 கி.மீ., முதல் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். புயல் காரணமாக அநேக இடங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 

அதேசமயம் கடலூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யலாம். சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

நான்கரை மணிநேரம், 100 காவலர்கள்... மாணவியைக் கண்டுபிடிக்காதது ஏன்? இபிஎஸ் கேள்வி

ஆளுங்கட்சி உறுப்பினரின் குடும்பத்தினர் மூவர் சடலமாக மீட்பு! போலீஸார் விசாரணை

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

SCROLL FOR NEXT