தமிழ்நாடு

கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையைக் கடக்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN

கஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,  வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் சென்னை, நாகையிலிருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 14 கி.மீ. வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் தற்போது மணிக்கு 18 கி.மீ.ஆக அதிகரித்துள்ளது.  

இரவு 11.30 மணியளவில் கஜா புயல் பாம்பன்-கடலூர் இடையே கரையைக் கடக்கும். கஜா புயல் கரையை கடக்கும்போது சென்னைக்கு பெரிய அளிவில் பாதிப்பு இருக்காது. கஜா புயல் காலை 11.30 மணியளவில் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது.  புயல் கரையை கடக்கும்போது 80 கி.மீ., முதல் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். 

புயல் காரணமாக அநேக இடங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.  அதேசமயம் கடலூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யலாம். சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும். இவ்வாறு அவர் தெரிவித்திருநதார்.  

இந்நிலையில் கஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகவலை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT