தமிழ்நாடு

கஜா புயல் எதிரொலி: ரயில்கள், சிறப்புக்கட்டண ரயில்கள் ரத்து

கஜா புயல் எதிரொலியாக பயணிகளின் பாதுகாப்பைக் கருதி திருச்சி தஞ்சை சிறப்புக்கட்டண ரயில்கள்  உள்பட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

DIN


கஜா புயல் எதிரொலியாக பயணிகளின் பாதுகாப்பைக் கருதி திருச்சி தஞ்சை சிறப்புக்கட்டண ரயில்கள்  உள்பட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் கடலூருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கும் இடையே இன்று வியாழக்கிழமை மாலை கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் கடும் கொத்தளிப்புடன் காணப்படும். அலைகள் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேலெழும்பும். கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து பயணிகளின் பாதுகாப்பைக் கருதி பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி - காரைக்கால், காரைக்கால் - தஞ்சை,  விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிக்கள் ரயில்கள், காரைக்கால் - சென்னை, மன்னார்குடி - சென்னை, வேளாங்கண்ணி - சென்னை, தஞ்சை - சென்னை உழவன் விரைவு ரயில், திருச்சி தஞ்சை சிறப்புக்கட்டண ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கஜா புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும் நாகைக்கு வடகிழக்கே 480 கி.மீ. தொலைவிலும், மேற்கு தென்மேற்கு திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT