தமிழ்நாடு

கஜாபுயல் எதிரொலி: பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல் 

DIN


கஜா புயல் எதிரொலியால் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் இன்று மூடப்படுவதாகவும், படகு சவாரி இன்றும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் கடலூருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கும் இடையே இன்று வியாழக்கிழமை மாலை கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் கடும் கொத்தளிப்புடன் காணப்படும். அலைகள் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேலெழும்பும். கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து புயல் அபாயம் உள்ள நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருதி பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் இயக்கப்படும் படது சவாரிகளும் இன்றும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT