தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோயில் குளத்தில் பெண் சடலம்: தீபத் திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி

DIN

அருணாசலேஸ்வரர் கோயில் குளத்தில் 3 நாளில் 3 பேர் இறந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (நவம்பர் 14) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத் திருவிழாவின் 3-ஆம் நாளான இன்று காலை 10 மணிக்கு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.

வீதியுலாவுக்கு வந்த பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தர்கள், கோயிலில் கம்பத்திளையனார் சன்னதி அருகே உள்ள சிவகங்கை தீர்த்தக்குளத்தில் பெண் ஒருவரிடம் சடலம் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து நீண்ட நேரமாகப் போராடி பெண்ணின் சடலத்தை மீட்டனர். இறந்து கிடந்த பெண் யார்?, எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

தீபத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், கோயில் குளத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

3 நாளில் 3 இறப்புகள்:
கொடியேற்றம் நடைபெற்ற நவம்பர் 14-ஆம் தேதி சாமி வீதியுலா நடைபெறும் பெரிய தெருவில் ஒருவர் இறந்தார். இதனால் அன்றைய தினம் சாமி ஊர்வலம் தாமதமானது. 2-ஆம் நாளான நவம்பர் 15-ஆம் தேதி (வியாழக்கிழமை) பே கோபுரத் தெருவில் வசிக்கும் சிவாச்சாரியார் ஒருவரின் தகப்பனார் இறந்தார். இதன் காரணமாகவும் சாமி வீதியுலா தாமதமானது.

3-ஆம் நாளான நவம்பர் 16-ஆம் தேதி கோயில் குளத்திலேயே பெண் சடலம் மீட்கப்பட்டது. கோயிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறவில்லை, ஆகம விதிப்படி தீபத் திருவிழா நடைபெறவில்லை. இதன் காரணமாகவே தீபத் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து சுவாமி வீதியுலா வரும் மாட வீதிகள், கோயிலில் தினமும் ஒரு இறப்பு சம்பவம் நடைபெற்று வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT