தமிழ்நாடு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

DIN

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவத்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
முதல்வர் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் அனைத்து துறைகளும் செயல்படுகிறது. இரவு முதலே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புயல் வருவதற்கு முன்பாகவே 82000 பேர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீர் நிலைகளில் தயார் நிலையில் மணல் மூட்டைகள் இருக்கின்றன. விரைவாக இயல்வு நிலை திரும்ப துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிடும் பணி இனி தான் தொடங்கும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT