தமிழ்நாடு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் வேகமாக செய்திருக்கலாம்: ஸ்டாலின்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் வேகமாக செய்திருந்தால் பாதிப்புகளைக் குறைத்திருக்கலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

DIN


புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் வேகமாக செய்திருந்தால் பாதிப்புகளைக் குறைத்திருக்கலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

புயலால பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தானே, வர்தா, ஓகி வரிசையில் தற்போது கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன். 

அப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கஜா புயலால் 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை! என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், பருவ மழை தொடங்கும் முன்பே நீர்நிலைகளை முறையாக தூர்வாரியிருந்தால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்றும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் வேகமாக செய்திருந்தால் பாதிப்புகளைக் குறைத்திருக்கலாம் என்றும் ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

SCROLL FOR NEXT