தமிழ்நாடு

தஞ்சை , திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு 

DIN

சென்னை: தஞ்சை , திருவாரூர் உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய 'கஜா' புயலின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏறட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன், பல்லாயிரம் மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது முழுமையான அளவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன 

இந்நிலையில் தஞ்சை , திருவாரூர் உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில விற்பனை மேம்பாட்டு ஆணைய மேலாளர் கிர்லோஷ் குமார் தெரிவித்துள்ள தகவலாவது:

'கஜா' புயலின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுளள தஞ்சாவூர் , திருவாரூர்,  நாகப்பட்டிணம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இந்த உத்தரவைத் தொடர்ந்து பகல் 1 மணி அளவிலேயே பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மொத்தமாக 4 மாவட்டங்களிலும் சேர்த்து 600-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளதாகத் தெரிகிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT