தமிழ்நாடு

கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம்: தமிழக அரசு கணக்கிட்டிருப்பதாக தகவல்

DIN


சென்னை: கஜா புயலால் தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று தமிழக அரசு கணக்கிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிவாரணப் பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.500 கோடியை தமிழக அரசு விடுவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சேத மதிப்புகளும் கணக்கிடப்பட்டு வருகிறது. அதில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு கஜா புயலால் சேதம் அடைந்திருக்கலாம் என்று தமிழக அரசு முதற்கட்டமாக கணக்கிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT